பொன்மலை வாரச்சந்தையின் வாடகை உயர்வுக்கு கண்டனம்..!

190

பொன்மலை வாரச்சந்தையில் வாடகை பலமடங்கு உயர்த்தப்பட்டதை கண்டித்து வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி மாவட்டம் பொன்மலையில் ஞாயிறுதோறும் வாரசந்தையும், தினசரி சந்தையும் நடந்து வருகிறது. பழமை மிக்க இந்த சந்தை கடந்த சில வாரங்களுக்கு முன்பு, தென்னக ரெயில்வேயால் தனியார் நிறுவனத்திற்கு குத்தகை விடப்பட்டது. இதன் பின் இந்நிறுவனம் கடைகளுக்கான வாடகையை உயர்த்தியது. மேலும் சந்தைக்கு வரும் வாகனங்களின் நிறுத்தத்திற்கும் அதிக கட்டணம் வசூலித்தது. இதனால் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும், கட்டணத்தை குறைக்க வேண்டும் என பலமுறை சந்தை வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு அந்நிறுவனம் செவிசாய்க்காததால், வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.