ஸ்டெர்லைட் ஆலையை மூடும் அறிவிப்பு நிரந்தரமானதாக இருக்க வேண்டும் – இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொய்தீன்

152

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதாக தமிழக அரசின் அறிவிப்பு இருக்க வேண்டும் என, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த ஆண்டு ஜனாதிபதி மாளிகையில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை நடத்தாதது வருந்ததக்கது என்றார். நீட் தேர்வு அறிவிப்பு போல் இல்லாமல், ஸ்டெர்லைட் ஆலையை மூடும் முடிவு நிரந்தரமானதாக இருக்க வேண்டும் என, தமிழக அரசை காதர் மொய்தீன் கேட்டுக் கொண்டார்.