நீட் தோல்வியால் திருச்சி மாணவி சுபஸ்ரீ தற்கொலை..!

237

நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் திருச்சியை சேர்ந்த சுபஸ்ரீ என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீட் தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து அடுத்தடுத்து தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. நேற்று முன்தினம், விழுப்புரத்தை சேர்ந்த பிரதீபா என்ற மாணவி எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதேபோன்று விழுப்புரத்தை சேர்ந்த மற்றுமொரு மாணவியான கிருத்திகா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் எதிரொலியாக தமிழகத்தில் ஆங்காங்கே போராட்டங்கள் வலுத்து வருகின்றன.

இந்த நிலையில் திருச்சியில் சுபஸ்ரீ என்ற மாணவி நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்து கொண்டார். நம்பர் ஒன் டோல்கேட் பகுதியை சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுனர் கண்ணன் என்பவரின் மகளான சுபஸ்ரீ, நீட் தேர்வில் 94 மதிப்பெண்களை பெற்றிருந்தார். இதனால் மன உளைச்சலுடன் காணப்பட்ட அவர், நள்ளிரவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.