பள்ளி முதல்வர் திட்டியதால் விபரீத முடிவு..!

296

திருவெறும்பூர் அருகே பள்ளி முதல்வர் திட்டியதால் மனமுடைந்த மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை அடுத்த காட்டூர் பகுதியை சேர்ந்தவர் தாரணி. இவர் வேங்கூரில் உள்ள தனியார் பள்ளியில் உள்ள விடுதியில் தங்கி 12ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் விடுதியில் இருந்த போது, தாரணி செல்போன் பயன்படுத்தியால் பள்ளி முதல்வர் அவரிடம் கடுமையாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. சக மாணவர்கள் முன்பு திட்டியதால் மனமுடைந்த தாரணி பள்ளி விடுதியின் 3 வது மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதனையடுத்து அவரை பள்ளி நிர்வாகத்தினர் உடனடியாக மீட்டு, திருச்சியில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் மாணவிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவி தற்கொலை முயற்சி தொடர்பாக பள்ளி நிர்வாகம் முறையான தகவலை தர மறுப்பதாகவும் பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர்.