சட்ட விரோதமாக கடத்தி வரப்பட்ட தங்க செயின் பறிமுதல்..!

152

சட்ட விரோதமாக கடத்தி வரப்பட்ட இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க செயினை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திருச்சி விமான நிலையத்தில், ஷார்ஜாவில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சென்னையை சேர்ந்த அருண் என்பவரது உடமைகளை சோதனை செய்தபோது, சுமார் இரண்டரை லட்சம் மதிப்புள்ள 75 கிராம் எடையுள்ள தங்க செயினை சட்ட விரோதமாக மறைத்து எடுத்து வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.