கோலாலம்பூர்-திருச்சி பயணியிடம் 190 கிராம் தங்கம் பறிமுதல்..!

81

மலேசியாவிலிருந்து திருச்சிக்கு விமானத்தில் கடத்திக் கொண்டுவரப்பட்ட சுமார் ஆறரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகையை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து திருச்சி வந்த ஏர் ஆசியா விமானத்தில் வரும் பயணி ஒருவர் தங்கத்தை கடத்திவருவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அதிகாலையில் திருச்சி வந்த அந்த விமானத்தில் வான் நுண்ணறிவுப்பிரிவு சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, ஆசிக் முகம்மது என்ற பயணி தனது கழுத்தில் 190 கிராம் தங்கச் சங்கிலியை மறைத்து வைத்திருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து அந்த நகையை பறிமுதல் செய்த அதிகாரிகள் மேற்கொண்டு விசாரணை நடத்தினர்.