கோயில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டுப் போட்டி | 450 வீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

170

திருச்சி அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில், 400க்கும் மேற்பட்ட வீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்று காளைகளை அடக்கினர்.

திருச்சி மாவட்டம் லால்குடி கீழவீதியில் மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இதில் அரியலூர், பெரம்பலூர், மதுரை, புதுக்கோட்டை, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, 650க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. 450க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு, வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகள் அடக்கினர். இதில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், அடங்க மறுத்த காளைகளின் உரிமையாளர்களுக்கும் பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டுப் போட்டியினை ஏராளமானோர் ஆர்வமுடன் கண்டு களித்தனர்.