திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு

559

வைகோ, சீமான் தொண்டர்கள் சரமாரியாக தாக்கி கொண்டதால் திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

கதிராமங்கலம் போராட்டம் ஓராண்டு நிறைவு பெற்றதை அடுத்து, புதுக்கோட்டையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க, சீமான் மற்றும் வைகோ திருச்சி விமான நிலையத்திற்கு வந்திருந்தனர். வைகோ-வை அவரது தொண்டர்கள் கட்சி கொடியினை ஏந்தி, கோஷமிட்டவாறு வரவேற்றனர். இதனால், ஆத்திரமடைந்த நாம் தமிழர் கட்சியினர், அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, கம்பு மற்றும் கொடி கம்பத்தை கொண்டு ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதனால் திருச்சி விமான நிலையத்தில் பெரும் பதற்றம் நிலவியது. இரு தரப்பினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.