திருச்செந்துறை அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் அருந்தி தற்கொலை ..!

416

திருச்செந்துறை அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்டம் திருச்செந்துறை பகுதியை சேர்ந்தவர்கள் கிருஷ்ண மூர்த்தி-கமலா. பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற கிருஷ்ணமூர்த்தி தம்பதிக்கு, ரகுநாதன் , சுப்பிரமணியன் என்ற 2மகன்களும், அகிலா, மது என்ற 2 மகள்களும் உள்ளனர்.
இதில் ரகுநாதன், அகிலா, மது ஆகியோர் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள். இவர்கள் மூன்று பேரும் தந்தை கிருஷ்ணமூர்த்தியுடன் தனியாக வசித்து வந்தனர்.
இந்நிலையில், கிருஷ்ணமூர்த்தியின் வீடு நீண்ட நேரம் திறக்கப்படாததால், போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உள்ளே சென்று பார்த்தபோது, 4 பேரும் வாயில் நுரையுடன் உயிரிழந்த நிலையில் இருந்தனர். 4 பேரின் உடல்களையும் மீட்டு போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.