திருச்சி பொன்மலை பணிமனையில் SRMU சார்பாக வருகின்ற ஜூலை மாதம் 11 ந் தேதியன்று நடைபெறவுள்ள வேலைநிறுத்த விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது

198

திருச்சி: இந்திய முழுதும் இரயில்வே துறை ஊழியர்கள் வருகின்ற வருகின்ற ஜூலை மாதம் 11 ந் தேதியன்று 17 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். 7 வது சம்பள கமிஷனை மாற்றக் கோரியும் குறைந்த பட்ச ஊதியமாக 26 ஆயிரம் ரூபாய்கள் வழங்க வேண்டியும் புதிய பென்சன் திட்டத்தை கைவிட கோரியும் நடைபெறவுள்ள இந்த வேலை நிறுத்த போரட்டத்தின் விளக்க பொதுக்கூட்டம் திருச்சி பொன்மலை பணிமனையில் SRMU சார்பாக துணை பொது செயலாளர் வீரசேகரன் தலைமையில் நடைபெற்றது. இதில் 500 க்கும் அதிகமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்