திருச்சி அரைவட்ட சுற்றுச்சாலை பணியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியரை விவசாயிகள் முற்றுகையிட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.

261

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பழனிச்சாமி தலைமையில், விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
அந்த கூட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சின்னதுரை தலைமையில் பல்வேறு விவசாய சங்கத்தினர் நெற்றியில் நாமத்துடன் பங்கேற்றனர்.

அப்போது 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள திருச்சி அரைவட்ட சாலை பணியை முடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விவசாயிகள் ஆட்சியர் பழனிசாமியை முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினர்.