திருச்சி சொத்து தகராறில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் மோதிக் கொண்டனர். இதில் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டார்.

334

திருச்சி சொத்து தகராறில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் மோதிக் கொண்டனர். இதில் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டார்.

திருச்சி மாவட்டம் கல்லணை அருகே உள்ள உத்தமர்சீலி என்ற இடத்தை சேர்ந்தவர் சிவக்கண்ணு, இவருக்கும் இவரது உறவினர் பாம்பு கணபதி எனபவருக்கும் இடையே பல வருடங்களாக சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. இது பற்றி Tollgate காவல்நிலையத்தில் பரஸ்பரம் புகார் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இந்த நிலையில் உத்தமர்சீலி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற சிவக்கண்ணுவை பாம்பு கணபதி தலைமையிலான 13 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளனர். இதில் சிவக்கண்ணு படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இத்தகவலை அறிந்த சிவக்கண்ணுவின் தந்தை செல்லத்துரை, கண்ணன், சண்முகம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்களையும் பாம்பு கணபதி கோஷ்டியினர் அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் சிவக்கண்ணுவின் தந்தை செல்லதுரை உயிரிழந்தார். மற்ற இருவரும் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து Tollgate காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். மேலும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.