மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த கிராம கமிட்டி தலைவர் மீது மகளிர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

296

திருச்சி திருவெறும்பூர் அருகே ஆலத்தூர் கிராமத்தின், கமிட்டி தலைவர் வைரம். இவர், பள்ளி மாணவி ஒருவரை மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இவரின் மேல் 3 பிரிவுகளில், மகளிர் பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினர். நீதிபதி ஜெசிந்தா மார்டின் உத்தரவிட்டதை தொடர்ந்து, வைரம் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அடுத்த மாதம் 6ஆம் தேதிவரை வைரத்திற்கு நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.