அரியலூர் அருகே மதுகடையை அகற்றகோரி, விவசாயி ஒருவர் பிணம் வேடமிட்டு நூதன முறையில் சாலை மறியலில் ஈடுபட்டார்.

295

அரியலூர் அருகே மதுகடையை அகற்றகோரி, விவசாயி ஒருவர் பிணம் வேடமிட்டு நூதன முறையில் சாலை மறியலில் ஈடுபட்டார்.
அரியலூர் மாவட்டம் கீழகாவாட்டாங்குறிச்சி கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் குடித்துவிட்டு இருச்சக்கர வாகனத்தில் வருபவர்களால், அடிக்கடி சாலை விபத்து நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இது குறித்து பல முறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், டாஸ்மாக் கடையை அகற்றகோரி விவசாயி ஒருவர் பிணம் வேடமிட்டு நூதன முறையில் சாலை மறியலில் ஈடுபட்டார். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், கூட்டத்தினரை கலைந்து போக வலியுறுத்தினர்.