திருச்சி மத்திய ரயில் நிலையத்தில் அனாதையாக கிடந்த போதைப் பொருள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

307

திருச்சி மத்திய ரயில் நிலையத்தில் அனாதையாக கிடந்த போதைப் பொருள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
திருச்சி மத்திய ரயில் நிலையத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். எந்த நேரமும் மக்கள் நடமாட்டத்துடன் இருக்கும் இந்த ரயில் நிலையத்தில் போலிசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவது வழக்கம். இந்த நிலையில் 6வது நடைமேடையில் கேட்பாரற்று கிடந்த துணிப்பை ஒன்றை போலீசார் கண்டெடுத்தனர். அதை சோதித்து பார்த்ததில் 40 ஆயிரம் ருபாய் மதிப்பிலான 4 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், சிசி டிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.