திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனைக் கைதி தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

192

திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனைக் கைதி தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியை சேர்ந்தவர், சந்திரன். இவர் கடந்த 2004-ம் ஆண்டு, கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ஆயுள் தண்டனைக் கைதிகள் அனைவரும், சிறை வளாகத்தை சுற்றியுள்ள தோட்டப் பணிகளில் ஈடுபடுவது வழக்கம். இந்நிலையில் தோட்டப்பணிகள் முடிந்து அனைத்து கைதிகளும், சிறைக்கு திரும்பினர். ஆனால் சந்திரன் சிறைக்கு திரும்பாததைக் கண்ட சிறைக் காவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிறைக் கண்காணிப்பாளர் நிகிலா நாகேந்திரன் சம்பவம் குறித்து கே.கே.நகர் காவல் நிலையத்திற்கு புகார் அளித்தார். இதன்போரில் கைதி சந்திரனை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.