திருச்சி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது வேன் மோதி விபத்து | குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழப்பு..!

506

திருச்சி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது வேன் மோதிய கோர விபத்தில் குழந்தைகள் உட்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நாகர்கோவிலை சேர்ந்த 15க்கும் மேற்பட்டோர் வேன் ஒன்றில் திருப்பதிக்கு சென்று கொண்டிருந்தனர். நேற்று இரவு 12 மணியளவில் திருச்சியை அடுத்த துவரங்குறிச்சி அருகே சென்று கொண்டிருந்தபோது நிலை தடுமாறிய வேன் சாலை ஒரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போர்வெல் லாரி மீது வேகமாக மோதியது. இதில், வேனில் இருந்த நான்கு ஆண்கள், இரண்டு பெண்கள் மற்றும் மூன்று குழந்தைகள் உட்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். தகவல் அறிந்து விரைந்து காவல்துறையினர் தீயணைப்புத்துறையினர் உதவியுடன் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டனர்.
மேலும், காயமடைந்து உயிருக்கு போராடியவர்களை மீட்டு துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக திருச்சி, மதுரை நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.