திருச்சி அருகே தோட்டா தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்து குறித்த விசாரணையை, சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது.

300

திருச்சி அருகே தோட்டா தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்து குறித்த விசாரணையை, சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது.
திருச்சியை அடுத்த துறையூர் முருகப்பட்டியில் தனியாருக்கு சொந்தமான தோட்டா தயாரிக்கும் தொழிற்சாலையில் வழக்கம் போல தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, தொழிற்சாலையின் ஒரு பகுதியில் திடீரென்று ஏற்பட்ட வெடி விபத்தில் 18 தொழிலாளர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். இதனை அடுத்து அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட பிறகு, தோட்டா தொழிற்சாலைக்கு சீல் வைக்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார். இதுதொடர்பாக ஆலை உரிமையாளர் விஜய கண்ணன், அலுவலக மேலாளர் ராஜகோபால் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், தொழிற்சாலையில் நிகழ்ந்த விபத்து குறித்த விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது.