திருச்சி அருகே மூட்டை தூக்கும் தொழிலாளி ஒருவர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

236

திருச்சி அருகே மூட்டை தூக்கும் தொழிலாளி ஒருவர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள சோழன் மொழி நகரை சேர்ந்தவர் போஸ். இவர், தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக பணியில் இருந்தார். இந்த நிலையில், கிடங்கின் பின்புறம் தொழிலாளி போஸ், மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக சமயபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.