கருணாநிதிக்கு மணல் சிற்பம் மூலம் அஞ்சலி…

357

கருணாநிதி மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக மணல் சிற்பத்தை ஒடிசாவை சேர்ந்த பிரபல மணல் சிற்பக்கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் வடிவமைத்துள்ளார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவிற்கு உலகம் முழுவதும் உள்ள தலைவர்கள், தொண்டர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஓடிசாவை சேர்ந்த பிரபல மணல் சிற்பக்கலைஞர் சுதர்ஷன் பட்நாயக், புரி கடற்கரையில் கருணாநிதியின் உருவத்தை மணல் மூலம் சிற்பமாக வடிவமைத்துள்ளார். அதில் தி லெஜன்ட் என்ற வாசகத்தையும் அவர் பொறித்துள்ளார். மறைந்த கருணாநிதிக்கு தனது இரங்கலை தெரிவிக்கும் வகையில், மணல் சிற்பத்தை வடிவமைத்ததாக சுதர்ஷன் தெரிவித்துள்ளார்.