பிரதமர் வெளிநாட்டு சுற்றுப்பயணத்திற்கான செலவு ரூ.1,484 கோடி..!

609

வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்கு ஆயிரத்து 484 கோடி ரூபாய் பிரதமர் மோடி செலவிட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங், மாநிலங்களவையில் தாக்கல் செய்த அறிக்கையில், பிரதமர் மோடி 84 நாடுகளுக்கு, 42 முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். பிரதமராக மோடி பதவியேற்ற 2014 ஜூன் 15 முதல் 2018 ஜூன் 10 வரையிலான காலகட்டத்தில் சென்ற வெளிநாட்டு பயணத்தை கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மோடி பயணித்த விமானங்களை பராமரிக்க சுமார் ஆயிரத்து 088 கோடியும், வெளிநாட்டில் பயன்படுத்தப்பட்ட தனியார் விமானங்களுக்கு 387 புள்ளி 26 கோடி செலவிடப்பட்டுள்ளதாக வி.கே.சிங் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், ஹாட்லைன் தொலைதொடர்பு சேவைக்காக 9 புள்ளி 12 கோடி ரூபாய் அவர் செலவு செய்துள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.