போக்குவரத்து கழக ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு தமிழக அரசு விரைந்து தீர்வு காண வேண்டும்-வைகோ

295

போக்குவரத்து கழக ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு தமிழக அரசு விரைந்து தீர்வு காண வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய ஊதிய ஒப்பந்தம். ஓய்வூதியம், தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட தொகை 4, 500 கோடியை உரிய கணக்கில் சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து கழக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை சுட்டிக்காட்டியுள்ளார்.
பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைக்குப்பின்னரும் போராட்டம் முடிவுக்கு வராததால், தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சு வார்த்தைக்குப்பின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக வைகோ குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், தொழிற்சங்க தலைவர்களிடம் கொடுத்த வாக்குறுதியின்படி சுமுகமான முடிவு ஏற்படவும், தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும் தமிழக அரசு விரைந்து செயல்பட வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார்.