திருநங்கைகளுக்காக நடைபெற்ற அழகிப் போட்டியில் சென்னையைச் சேர்ந்த ஆண்ட்ரியா மிஸ் கூவாகமாகத் தேர்வு செய்யப்பட்டார்.

318

திருநங்கைகளுக்காக நடைபெற்ற அழகிப் போட்டியில் சென்னையைச் சேர்ந்த ஆண்ட்ரியா மிஸ் கூவாகமாகத் தேர்வு செய்யப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டம் கூவாகம் கிராமத்தில் பிரசித்திப் பெற்ற கூத்தாண்டவர் திருக்கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா இந்த ஆண்டு ஏப்ரல் 25-ம் தேதித் தொடங்கியது. இந்த விழாவில் கலந்துக் கொள்வதற்காக பல்வேறு மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் கூவாகத்திற்கு வருகைப் புரிந்திருந்தனர். இவர்களை உற்சாகப்படுத்தி மகிழ்விப்பதற்காக நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் தலைமைத் தாங்கினார். திரைப்பட நடிகர் ராகவா லாரன்ஸ் உட்பட பலர் கலந்துக் கொண்டு நிகழ்ச்சிகளை சிறப்பித்தனர்.
அதனைத் தொடர்ந்து மிஸ் கூவாகம் அழகிப் போட்டியின் முதற்கட்டமாகத் திருநங்கைகளுக்கான நடனப்போட்டிகள் நடைபெற்றன. இதில் கலந்துக் கொண்ட திருநங்கைகள் பாடலுக்கேற்ப நடனமாடி அசத்தினார்கள்.
இதனைத் தொடர்ந்து மிஸ் கூவாகம் அழகிப் போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 47 திருநங்கைகள் கலந்துக் கொண்டு வண்ண, வண்ண ஆடைகளுடன் மேடையில் ஒய்யாரமாக நடந்து வந்த காட்சிக் காண்போரைக் கவர்ந்தது. அவர்களில் 21 பேர் 2-ம் சுற்றுக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.
இதையடுத்து நடைபெற்ற 2-ம் சுற்றுப்போட்டி நடைபெற்றது. இதில் கலந்துக் கொண்ட 21 திருநங்கைகளும் மீண்டும் மேடையில் ஒய்யார நடை நடந்து வந்து அசத்தினர். இவர்களில் 10 பேர் 3-ம் சுற்றுக்குத் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் பத்துப் பேருக்கும் எய்ட்ஸ் விழிப்புணர்வுக் குறித்தும், பொது அறிவுத் திறன்கள் குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டன. இந்தப் போட்டியில் சென்னையைச் சேர்ந்த ஆண்ட்ரியா மிஸ் கூவாகம் பட்டத்தை வென்றார். அவருக்குத் திரைப்பட நடிகர் ராகவா லாரன்ஸ் கிரீடம் சூட்டிப் பரிசுகளை வழங்கினார்.