தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு எதிராக திருநங்கைகள் ஆர்ப்பாட்டம் ..!

373

தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழு விசாரணை நடத்த வேண்டுமென்று திருநங்கைகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தைக் கண்டித்து சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே திருநங்கைகள் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் டிஜிபி ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த திருநங்கைகள், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.