இந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞரானார் – சத்தியஸ்ரீ சர்மிளா

447

பரமக்குடியை சேர்ந்த சத்தியஸ்ரீ சர்மிளா இந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞராக பொறுப்பேற்றுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த சத்தியஸ்ரீ சர்மிளா, தமிழ்நாடு, புதுச்சேரி பார்கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்தார். இந்நிலையில் பார் கவுன்சிலில் பதிவு செய்த முதல் திருநங்கை என்ற பெருமைக்கு அவர் சொந்தக்காரரானார். வழக்கறிஞராக பொறுப்பேற்ற திருநங்கைக்கு அனைத்து தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சத்தியஸ்ரீ சர்மிளா, இந்த தருணம் தனது சமுதாய மக்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் உள்ளதாக தெரிவித்தார். மற்ற திருநங்கைகளுக்கு இது ஒரு ஊக்கமளிக்கும் வகையில் இருக்கும் என்றும் கூறினார்.