ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் : தமிழக அரசு உத்தரவு

287

தமிழகம் முழுவதும் 18 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக காவல்துறை உயர் அதிகாரிகள் 18 பேரை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி சென்னை, மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக இருக்கும் கணேசமூர்த்தி டிஜிபி அலுவலக ஐஜியாகவும், பயிற்சியிலிருந்த டிஐஜி பாலகிருஷ்ணன் சென்னை மத்திய குற்றப்பிரிவு இணை ஆணையராகவும் மாற்றப்பட்டுள்ளனர். டிஜிபி அலுவலக நிர்வாக டிஐஜியாக இருந்த செந்தில்குமாரி தொடர்வண்டித் துறை டிஐஜியாகவும், காத்திருப்போர் பட்டியலிலிருந்த எஸ்.பி விஜயகுமார் பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி.யாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

எஸ்பிசிஐடி எஸ்பியாக இருந்த ஜி.ராமர் அறிவுசார் சொத்துடமை அமல்பிரிவு எஸ்பியாகவும் அறிவுசார் சொத்துடமை அமல்பிரிவு எஸ்பியாக இருந்த தீபா கனிகர் போக்குவரத்து காவல் (மேற்கு) துணை ஆணையராகவும் மாற்றப்பட்டுள்ளனர். இதேபோல் போக்குவரத்து காவல் (மேற்கு) துணை ஆணையராக இருந்த துரை திருவாரூர் எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார். திருவாரூர் எஸ்பியாக இருந்த விக்ரமன் சென்னை டிஜிபி அலுவலக தானியங்கி மின்னணுப்பிரிவு எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார். இவர் உட்பட 18 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.