விரைவில் சின்னம் அறிவிக்கப்படும் – டி.ராஜேந்தர்

138

லட்சிய திமுக தனியாக போட்டியிடுவதாகவும், விரைவில் சின்னம் அறிவிக்கப்படும் என அக்கட்சியின் தலைவர் டி.ராஜேந்தர் தெரிவித்தார்.

சென்னையில் லட்சிய தி.மு.க. தலைவரும், நடிகருமான டி.ராஜேந்தர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், லட்சிய திமுகவுக்கு ஒரு தொகுதி தருவதாகவும், தங்கள் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என ஒரு பெரிய கட்சி கூறியதாகவும் தெரிவித்தார். சுயமரியாதை தங்கள் கட்சிக்கு உள்ளதால் தனியாக போட்டியிடுவதாகவும், விரைவில் சின்னம் அறிவிக்கப்படும் என டி.ராஜேந்தர் தெரிவித்தார்.