முன் பதிவில்லா ரயில் டிக்கெட்டுகளில் பிராந்திய மொழிகளில் அச்சடிக்கப்பட்டு இன்று முதல் அமலுக்கு வந்தது..!

2313

முன் பதிவில்லா ரயில் டிக்கெட்டுகளில் புறப்படும் இடம் மற்றும் சேரும் இடம் ஆகியவை பிராந்திய மொழிகளில் அச்சடிக்கப்பட்டு இன்று முதல் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
அந்தந்த மாநிலங்களில் உள்ள மக்களின் வசதிக்கேற்ப முன் பதிவில்லா ரயில் டிக்கெட்டுகளில் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் புறப்படும் இடம் மற்றும் சேரும் இடம் அச்சடிக்கப்படும் என்று ரயில்வே அமைச்சகம் அறிவித்தது. அதன்படி தென்னக ரயில்வேயின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா மற்றும் ஆந்திராவில் முன் பதிவில்லா ரயில்வே டிக்கெட்டுகளை மாநில மொழிகளில் வழங்கும் முறை அமலுக்கு வந்துள்ளது.