ரயிலில் கொண்டு வரப்பட்ட 5 கோடியே 75 லட்சம் பணம் கொள்ளை – நாசா உதவி

437

சேலம் ரயிலில் 5 கோடியே 75 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில், நாசா உதவியுடன் துப்பு துலங்கியுள்ளதாக சிபிசிஐடி தெரிவித்துள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி, சேலத்திலிருந்து ஐ.ஓ.பி. உள்ளிட்ட வங்கிகளில் இருந்து, சேலம் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் சென்னை ரிசர்வ் வங்கிக்கு கொண்டுவரப்பட்ட 5 கோடியே 75 லட்சம் பணத்தை ரெயிலின் மேற்கூறையை துளையிட்டு மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றனர். இந்த வழக்கு, ரெயில்வே காவல்துறையினர் விசாரித்து வந்தநிலையில், சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக விசாரணையில் முன்னேற்றம் ஏற்படாதநிலையில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் உதவியை சிபிசிஐடி நாடியது.

மத்திய அரசு அனுமதியுடன், சேலம் – சென்னை ரயிலின் 350 கிலோ மீட்டர் தொலைவு பதிவுகளை செயற்கைக் கோள் மூலம் நாசா புகைப்படங்களாக அனுப்பியது. நாசா புகைப்படங்களை வைத்து, 100-க்கும் மேற்பட்ட செல்போன் டவர்களின் அழைப்புகள் ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வின் முடிவில் சந்தேகத்திற்கிடமான 11 நபர்கள் விசாரணை வளையத்தில் கொண்டு வரப்பட்டனர். விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்கள் மத்திய பிரதேசம், பீகார் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என சிபிசிஐடி தகவல் அளித்துள்ளது.