ரயில்களில் ரிசர்வேஷன் செய்தவர் பட்டியல் ஒட்டப்படாது என ரயில்வே துறை அறிவிப்பு..!

399

நாட்டில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களில் இருந்தும் புறப்படும் ரயில்களில் முன்பதிவு செய்தவர்களின் பெயர் பட்டியல் ஒட்டப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து ரயில் நிலையங்களிலும் இருந்து கிளம்பும் ரயில்களில் முன்பதிவு செய்துள்ள பயணிகளின் பெயர் பட்டியல் ஒட்டப்பட்டு வந்தது. இதனால், பயணிகள் ரயிலில் ஏறும் முன், இந்த பெயர் பட்டியலைப் பார்த்து, தங்கள் இருக்கைகளை உறுதி செய்து கொள்ள வசதியாக இருந்தது. இந்த நிலையில், காகித செலவை கட்டுப்படுத்தவும், தூய்மை இந்தியா திட்டத்தை முன்னிட்டும், மத்திய ரயில்வே துறை, டெல்லி, மும்பை சென்ட்ரல், சென்னை சென்ட்ரல், ஹவுரா உள்ளிட்ட சில முக்கிய ரயில் நிலையங்களில் இருந்து புறப்படும் ரயில்களில் முன்பதிவு செய்த பயணிகளின் பெயர் பட்டியலை ஒட்டுவதை நிறுத்தியது.

இதனைத்தொடர்ந்து, இந்த நடவடிக்கை சிறிதுசிறிதாக, சென்னை, மும்பை உட்பட நாட்டின் பல்வேறு ரயில்நிலையங்களிலும் நீட்டிக்கப்பட்டது. தற்போது, நாட்டில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களில் இருந்தும் புறப்படும் ரயில்களில் முன்பதிவு செய்தவர்களின் பெயர் பட்டியல் ஒட்டப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ரயில் பயணிகள் குறிப்பாக முதியோர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.