கேரளாவிற்கு 3-வது நாளாக ரயில் சேவை பாதிப்பு..!

211

கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக, தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இருந்து கேரளா மாநிலத்திற்கு 3-வது நாளாக ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் பெய்து தொடர் கனமழை காரணமாக, விசாகப்பட்டினம் – கோவை-கொல்லம் இடையேயான விரைவு ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. பாலக்காடு-எர்ணாகுளம்- பாலக்காடு பயணிகள் ரயில் இன்று முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மங்களூர்-கோவை பயணிகள் ரயில் கோழிக்கோடு மற்றும் கோவை இடையே மட்டும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. சண்டிகர்-கொச்சுவேலி கேரல் சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ஒரு பகுதி மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூரில் இருந்து மங்களூர் செல்லக் கூடிய எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்பட்டது. புதுச்சேரி-மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை சேலத்துடன் நிறுத்தப்பட்டது. காரைக்கால்-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் பாலக்காட்டில் நிறுத்தப்பட்டது. இதேபோல ஐதராபாத்- திருவனந்தபுரம் சபரி எக்ஸ்பிரஸ், சேலம்- திருவனந்தபுரம் இடையே ஒரு பகுதி மட்டும் ரத்து செய்யப்பட்டது.