சுங்கச்சாவடிகளில் கட்டண வசூல் செய்யப்படுவதை மேலும் ஒரு மாத காலத்திற்கு ஒத்தி வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

260

நாடு முழுவதும் உள்ள சுங்கச் சாவடிகளில் இன்று முதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. சுங்கச்சாவடிகளில் மின்னணு முறையில் கட்டணம் வசூலிக்க ஸ்வைப்பிங் மெஷின் வசதி அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செங்கல்பட்டு சுங்கச்சாவடியில், ரொக்கமாக பணம் தருபவர்களுக்கு சில்லறை நோட்டுக்கள் வழங்க முடியாமல், சுங்கச்சாவடி ஊழியர்கள் திணறி வருகின்றனர்.

சில்லறை தட்டுப்பாடு காரணமாக சுங்கக்கட்டணம் கட்டமுடியாத வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதால், வாகன ஓட்டிகள் சுங்கச்சாவடி ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே கோவை கணியூர் பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில், மின்னணு முறையில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் பழைய 500 ரூபாய் நோட்டுகளும் வாங்கப்படுவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.