நாடு முழுவதும் 2 லட்சம் கிராமங்களில் கழிப்பறை வசதி இல்லை !

316

நாடு முழுவதும் 2 லட்சம் கிராமங்களில் கழிப்பறை வசதி இல்லை என்று ஆய்வு முடிவுகள் தெரிவித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மோடி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த பின்னர், திறந்த வெளியில் மலம் கழிப்பதை தடுக்கும் விதமாக தூய்மை இந்தியா என்ற திட்டத்தின் மூலம் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கழிப்பறை வசதி குறித்த புள்ளி விவரங்களை மத்தியஅரசின் சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ளது.
இதில் ஏறக்குறைய 2 லட்சம் கிராமங்களில் உள்ள வீடுகளில் கழிப்பறைகள் வசதி இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அரசின் குறிக்கோள்படி 2019 ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், திறந்த வெளியில் மலம் கழிப்பதை முடிவுக்கு கொண்டு திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக அனைத்து மாநில அரசுகளும் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என, மத்திய சுகாதார அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.