வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு…

322

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும், மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.