தமிழ்நாடு பிரீமியர் லீக் டி-20 தொடர் நெல்லையில் இன்று தொடக்கம்..!

533

தமிழ்நாடு பிரீமியர் லீக் டி-20 தொடர் நெல்லையில் இன்று தொடங்குகிறது. தொடக்க ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்- ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன.

டி.என்.பி.எல். என்று அழைக்கப்படும் தமிழ்நாடு பிரிமீயர் ‘லீக்’ 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2016-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. 8 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில், தூத்துக்குடி அணி அறிமுக டி.என்.பி.எல். கோப்பையை கைப்பற்றியது. கடந்த ஆண்டு நடைபெற்ற 2-வது போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி சாம்பியன் பட்டம் பெற்றது. 3-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி நெல்லையில் கோலாகலமாக இன்று தொடங்குகிறது. 8 அணிகளின் கேப்டன்கள், முக்கிய பிரமுகர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். ஆகஸ்டு 12-ஆம் தேதிவரை இந்த போட்டிகள் நடைபெறுகின்றன.

நெல்லை சங்கர் நகர் இந்தியா சிமெண்ட்ஸ் மைதானம், திண்டுக்கல் அடுத்த நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானம், சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானம் ஆகிய 3 இடங்களில் போட்டிகள் நடைபெறுகிறன. 3-வது டி.என்.பி.எல். போட்டியில் முதல் முறையாக வெளி மாநில வீரர்கள் பங்கேற்கின்றனர். ஒவ்வொரு அணிக்கும் 2 வீரர்கள் என, மொத்தம் 16 வீரர்கள் இதில் கலந்து கொள்கின்றனர். நெல்லை சங்கர்நகர் ஐ.சி.எல். மைதானத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில், திண்டுக்கல் டிராகன்ஸ்- ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள்
இன்று மோதுகின்றன.