பிரதமரை படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய எழுத்தாளர்கள் கைது : நாடு முழுவதும் எழுத்தாளர்கள் கண்டனம்

129

பிரதமர் மோடியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக 5 இடதுசாரி சிந்தனையாளர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து இன்று டெல்லி ஜந்தர் மந்தரில் மார்க்சிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

பிரதமர் மோடியை படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக இடதுசாரி எழுத்தாளர்கள் வரவர ராவ், அருண் பெரேரா, கவுதம் நவ்லகா, சுதா பரத்வாஜ், வெர்னான் கொன்ஸ்லேவ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு நாடு முழுவதும் உள்ள எழுத்தாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட 5 பேரையும் வரும் செப்டம்பர் 6ஆம் தேதி வரை வீட்டுக்காவலில் வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த கைது நடவடிக்கையை கண்டித்து ஆங்காங்கே எழுத்தாளர்கள் கண்டன பேரணிகளையும் நடத்தி வருகின்றனர். மகாராட்ஷ்டிரா அரசின் போக்கை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தப்படும் என தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி அறிவித்துள்ளார். இந்த போராட்டத்தின் போது அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க ஜந்தர் மந்தரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.