நள்ளிரவு 1.30 மணிக்கு வானில் அதிசய நிகழ்வு தோன்றும்..!

668

இன்று பூமிக்கு அருகே வரும் செவ்வாய் கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பூமிக்கு அருகே சரியாக இன்று நள்ளிரவு 1.30 மணிக்கு இந்த அரிய நிகழ்வு தோன்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 15 ஆண்டுகளுக்கு பிறகு பூமிக்கு மிக அருகில் செவ்வாய் கிரகணம் வருகிறது. இந்த அரிய நிகழ்வை வெறும் கண்ணால் பார்க்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பூமியில் இருந்து சுமார் 57.6 மில்லியன் கி.மீட்டர் தொலைவில் செவ்வாய் கிரகணம் கடந்து செல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதன்பின்னர் 2035 ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி தான் இந்த நிகழ்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் மட்டும் வானில் 3 அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது. கடந்த 14 ஆம் தேதி சூரிய கிரகணமும், இதைத் தொடர்ந்து கடந்த 27ஆம் தேதி சந்திர கிரகணமும் தோன்றியது. இந்நிலையில் இன்று இரவு 3 வது அதிசயமாக பூமிக்கு அருகில் செவ்வாய் கிரகணம் வருகிறது.