உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அட்டவணையை உடனடியாக தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

153

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அட்டவணையை உடனடியாக தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக் காலம் கடந்த 2016ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்தது. ஆனால் பழங்குடியின இடஒதுக்கீடு காரணமாக உள்ளாட்சி தேர்தல் தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் தற்போது வரை தேர்தல் நடத்தப்படவில்லை.

உரிய காலத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தாத தேர்தல் ஆணையம் மீது தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பான இன்றைய விசாரணையில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அட்டவணையை உடனடியாக தாக்கல் செய்ய மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது. உள்ளாட்சி தேர்தல் எப்போது நடத்தப்படும் என்றும் சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளது.