உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் பெல்ஜியம் – துனிசியா அணிகள் பலப்பரீட்சை..!

218

உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் பெல்ஜியம் – துனிசியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்று மூன்று ஆட்டங்கள் நடைபெற உள்ளன. மாஸ்கோவில் ஐந்தரை மணிக்கு தொடங்கும் முதல் லீக் ஆட்டத்தில்,பெல்ஜியம் அணி, துனிசியாவை சந்திக்கிறது. இரவு எட்டரை மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் தென் கொரியா அணி, மெக்சிகோவை எதிர்கொள்கிறது. இரவு 11.30 மணிக்கு சோச்சியில் நடைபெறும் ஆட்டத்தில் ஜெர்மனி அணி, சுவீடனை எதிர்த்து விளையாடுகிறது. இப்போட்டிகளை காண கால்பந்து ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.