புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, உட்கட்சி பூசல் விவகாரம் தொடர்பாக ஆலோசனை..!

261

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் இன்று நடைபெறும் அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுக செயற்குழுக் கூட்டம் கடந்த 20-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. வாஜ்பாய் மறைவைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 23-ம் தேதிக்கு செயற்குழு கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது. அதன்படி இன்று மாலை 4 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. தலைமை கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் என சுமார் 300 பேர் கலந்து கொள்கின்றனர்

கூட்டத்தில் கட்சியில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, காலியாக உள்ள பொறுப்பாளர்கள் பதவிக்கு நிர்வாகிகளை தேர்வு செய்வது உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. மேலும் திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு, கட்சி விதிகளில் திருத்தம் வழக்கு, நாடாளுமன்ற தேர்தல் உள்ளிட்டவை குறித்தும் ஆலோசனை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.