தமிழக அரசு பேருந்துகளில் பயணக் கட்டணம் விரைவில் உயர்த்தப்பட உள்ளதாக தகவல் ..!

1267

தமிழக அரசு பேருந்துகளில் பயணக் கட்டணம் விரைவில் உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக அரசின் போக்குவரத்துக் கழகங்களில் 22 ஆயிரத்து 203 பேருந்துகள் உள்ளன.இந்த அரசு போக்குவரத்துக் கழகங்கள் தொடர்ந்து நஷ்டத்தையும், இழப்பையும் சந்தித்து வருகின்றன. இந்த நஷ்டத்தை ஈடுகட்ட கடந்த 2011-ம் ஆண்டு பேருந்து கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தியது. இந்நிலையில் தற்போதுள்ள கடன் சுமையை குறைக்க, பஸ் தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய நிலுவைத் தொகையை வழங்க, அரசு பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.
அதன்படி சாதாரண பேருந்துகளில் ஒரு கிலோ மீட்டருக்கான கட்டணம் 42 காசில் இருந்து 60 காசுகளாகவும். எக்ஸ்பிரஸ், டீலக்ஸ் பேருந்துகளின் கட்டணம் கிலோ மீட்டருக்கு 56 காசில் இருந்து 73 காசாக உயர உள்ளது.
சூப்பர் டீலக்ஸ் பஸ்கள் கடடணம் 60 பைசாவில் இருந்து 75 காசாகவும், அல்ட்ரா டீலக்ஸ் பஸ்களின் கட்டணம் கிலோ மீட்டருக்கு 70 பைசாவில் இருந்து 95 பைசாவாக உயர உள்ளது.
சென்னை மாநகர போக்குவரத்து கழக பஸ்களில் தற்போது குறைந்தபட்ச கட்டணம் மூன்று ரூபாயாக உள்ளது. இந்த கட்டணத்தை 5 ரூபாயாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதிகப்பட்ச கட்டண உயர்வு 25 ரூபாயாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.