டி.என்.பி.எல்.கிரிக்கெட் போட்டியில், இன்றைய ஆட்டத்தில் திருவள்ளூர் வீரன்ஸ் அணியுடன் சென்னை சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி பலப்பரீட்சை நடத்துகிறது.

185

டி.என்.பி.எல்.கிரிக்கெட் போட்டியில், இன்றைய ஆட்டத்தில் திருவள்ளூர் வீரன்ஸ் அணியுடன் சென்னை சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி பலப்பரீட்சை நடத்துகிறது.
8 அணிகள் பங்கேற்றுள்ள தமிழ்நாடு ப்ரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பை எட்டியுள்ளது. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி மட்டும் அரை இறுதியை உறுதி செய்துள்ளன. இந்த நிலையில் இன்று நடைபெறும் 25 வது லீக் ஆட்டத்தில், சென்னை சேப்பாக் அணியும், திருவள்ளூர் அணியும் மோதுகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் அரை இறுதிக்கு நுழையும் வாய்ப்பு கிடைக்கும் என்பதால் இரு அணி வீரர்களும் வெற்றி பெறும் முனைப்பில் உள்ளனர். சென்னை அணியில் தொடர்ந்து இரண்டு அரை சதம் விளாசிய சற்குணம் இப்போட்டியிலும் அதிரடி காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் திருவள்ளூர் அணியில் கேப்டன் பாபா அபராஜித் உள்ளிட்ட வீரர்களும் சென்னை அணிக்கு சவாலாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. இன்று மாலை 6.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.