நில மோசடி வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா சட்டவிரோதமாக பணம் பெற்றுள்ளது விசாரணை அறிக்கையில் அம்பலமாகியுள்ளது.

219

நில மோசடி வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா சட்டவிரோதமாக பணம் பெற்றுள்ளது விசாரணை அறிக்கையில் அம்பலமாகியுள்ளது.
அரியானாவில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கு சட்டத்துக்கு புறம்பாக நிலம் ஒதுக்கியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி திங்கரா தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷனை தற்போதைய மனோகர் லால் கட்டார் தலைமையிலான பா.ஜ.க. அமைத்தது. இந்நிலையில், 180 பக்கங்கள் அடங்கிய
விசாரணை அறிக்கை மாநில அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா சட்டவிரோதமாக பணம் பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. நில ஒப்பந்தம் தொடர்பாக ஒரு ரூபாய் கூட முதலீடு செய்யாமல் 50 கோடி ரூபாய்க்கு மேல் ராபர்ட் வதேரா லாபம் ஈட்டியுள்ளதாக அறிக்கையில்
கூறப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டு குறித்து ராபர்ட் வதேரா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக
அவருக்கு நெருக்கடி முற்றியுள்ளது.