தமிழகம் மற்றும் கர்நாடகாவில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு……….. உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

270

தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களின் சட்டம், ஒழுங்கை பாதுகாக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற உள்ளது.
காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 15 ஆயிரம் கனஅடி நீரை பத்து நாட்களுக்கு திறக்கவேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழர்களுக்கு எதிராக கர்நாடகாவில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறியது. அதில், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் சேதமடைந்தன. இதேபோன்று, தமிழகத்திலும் ஒரு சில இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றது. இதையடுத்து, இரு மாநிலங்களின் சட்டம், ஒழுங்கை பாதுகாக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், கர்நாடகாவில் 15 ஆம் தேதியும், தமிழகத்தில் 16 ஆம் தேதியும் போராட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே, போராட்டக்காரர்கள் வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும், இரு மாநிலங்களிலும் சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த மனுவை தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இன்று விசாரிக்கும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் தெரிவித்துள்ளார்.