தமிழகத்தில் வெளுத்து வாங்கும் வெயில்.. கரூரில் 106 டிகிரி ஃபாரான்ஹீட் வெப்பம் ..!

1275

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் சதத்தை கடந்து பொதுமக்களை வெளுத்து வாங்கி வருகிறது.
தமிழகத்தில் கத்திரி வெயில் துவங்குவதற்கு முன்னரே வெயிலின் தாக்கம் கடுமையாக உணரப்படுகிறது. கரூரில் அதிகப்பட்சமாக 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. இதுதவிர திருச்சி, திருத்தணி, மதுரை, நாமக்கல், சேலம், வேலூர், தர்மபுரி ஆகிய பகுதிகளில் வெயில் சதத்தை தொட்டதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இதேபோல் சென்னையிலும் வெயிலின் தாக்கம் கொடூரமாக உள்ளது. இன்றையதினம் சென்னையில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியது. அவ்வபோது அனல் காற்று வீசுவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதனிடையே வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.