தெற்கு அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால், தென் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

366

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில். தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள கடற்பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அடுத்த 24 மணி நேரத்தில், தென் தமிழக கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும். வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மானாமதுரையில் 4 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.