தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை..!

99

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான, தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம், பாகலூர், சூளகிரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் சாலையில் தண்ணீர் தேங்கியது. திடீரென மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நாமக்கல் மாவட்டத்தில், திருச்செங்கோடு, ராசிபுரம், பள்ளிபாளையம், நாமக்கல் ஆகிய பகுதிகளில் கடநத் 4 நாட்களாக மாலை நேரங்களில் மழை பெய்தது. வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில், மழை பெய்ததால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.