தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் சூறாவளிக் காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்தது ..!

731

தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் சூறாவளிக் காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்தது, குளிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது. அதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ராயக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் சூறாவளிக்காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. பின்னர் இடி மின்னலுடன் கூடிய ஆலங்கட்டி மழையும் பெய்ததால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி நிலவியது. இதேபோல் புதுக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சூறாவளிக் காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.