தமிழகத்தில் பரவலாக கொட்டித்தீர்த்த மழை | வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி !

328

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
தமிழகத்தில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக கோடை வெயிலால் பொதுமக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
கடலூரில் அக்னி நட்சத்திரம் முடிவடைந்தும் அங்கு 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பம் வாட்டி வந்தது. இந்நிலையில் நேற்றிரவு இரவு பலத்த காற்றுடன் நல்ல மழை பெய்தது. இந்த திடீர் மழையால் அங்கு வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது.
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கொடைக்கானலில் ஏரிகளில் தண்ணீர் நிரம்பி காணப்படுவதால் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்கின்றனர்.