தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 9 லட்சம் மாணவ, மாணவியர் எழுதுகின்றனர்..!

465

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 9 லட்சம் மாணவ, மாணவியர் எழுதுகின்றனர்.தமிழகத்தில் உள்ள 6 ஆயிரத்து 756 பள்ளிகளில் படிக்கும் 8 லட்சத்து 51 ஆயிரத்து 792 மாணவ-மாணவிகளும், புதுச்சேரியில் 147 பள்ளிகளை சேர்ந்த 15 ஆயிரத்து 142 மாணவ-மாணவிகளும் இந்த தேர்வை எழுதுகின்றனர். இவர்களை தவிர தனித் தேர்வர்களாக 40 ஆயிரத்து 682 பேரும் பொதுத்தேர்வை எழுதுகின்றனர். மாணவர்கள் தேர்வு எழுதுவதற்காக தமிழகத்தில் 2 ஆயிரத்து 894 தேர்வு மையங்களும், புதுச்சேரியில் 48 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் 407 பள்ளிகளை சேர்ந்த 50 ஆயிரத்து 584 மாணவ-மாணவிகள் பொதுத்தேர்வை எழுதுகின்றனர். தேர்வு எழுதும் மாணவர்கள் மட்டுமின்றி, தேர்வு அறைக்கு வரும் ஆசிரியர்களும் செல்போன் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்வில் ஒழுங்கீன நடவடிக்கைகளில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை எச்சரித்துள்ளது.